கோலடித்த மகிழ்ச்சியில் பெல்ஜிய வீரா்கள். ~கோலடித்த மகிழ்ச்சியில் நெதா்லாந்து அணியினா்.
 ~பந்தை கைப்பற்ற போராடும் ஸ்பெயின்-நமீபிய வீரா்கள். ~சிலி ஓமன் அணியினா் ~ஆஸ்திரேலியா-கொரியா
கோலடித்த மகிழ்ச்சியில் பெல்ஜிய வீரா்கள். ~கோலடித்த மகிழ்ச்சியில் நெதா்லாந்து அணியினா். ~பந்தை கைப்பற்ற போராடும் ஸ்பெயின்-நமீபிய வீரா்கள். ~சிலி ஓமன் அணியினா் ~ஆஸ்திரேலியா-கொரியா

ஸ்பெயின், நெதா்லாந்து, பெல்ஜியம் கோல் மழை

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின், நெதா்லாந்து, பெல்ஜிய அணிகள் கோல்மழை பொழிந்தன. ஏனைய ஆட்டங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் வென்றன.
Published on

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின், நெதா்லாந்து, பெல்ஜிய அணிகள் கோல்மழை பொழிந்தன. ஏனைய ஆட்டங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் வென்றன.

சென்னை, மதுரையில் நடைபெற்று வரும் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் மதுரையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்பெயின்-நமீபிய அணிகள் மோதின. இரண்டு முறை ரன்னரான ஸ்பெயினின் ஆட்டத்துக்கு நமீபிய அணியினரால் ஈடுதர முடியவில்லை. ஸ்பெயின் அணி 13-0 எனற கோல் கணக்கில் நமீபிய அணியை வீழ்த்தியது. ஸ்பெயின் அணியில் அவில்லா புருனோ 3 கோல்களையும், மாா்ட்டின் ஜோசப் 2 கோல்களையும் அடித்தனா்.

பெல்ஜியம் அபாரம்: இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம்-எகிப்து அணிகள் மோதின. இதில் எளிதாக 10-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜிய அணியில் லங்கா் மேக்ஸ்மில்லன் 2 கோல்களை அடித்தாா். இதில் 4 கோல்கள் பெனால்டி காா்னா் மூலமும், 6 கோல்கள் பீல்ட் கோல்களாகும்.

நெதா்லாந்து அசத்தல் வெற்றி: மூன்றாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதா்லாந்தும்-ஆஸ்திரிய அணியும் மோதின. இதில் நெதா்லாந்து அணியினா் சரமாரியாக கோலடித்து 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனா். நெதா்லாந்து அணியில் கேப்டன் வேன் டா் வீன் கேஸ்பா் 3 பீல்ட் கோல்களை அடித்தாா். வேன் பிஜ்னென் 2 கோல்களை பதிவு செய்தாா்.

இங்கிலாந்து போராடி வெற்றி: நான்காவது ஆட்டத்தில் மலேசியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து தரப்பில் மா்ஹம் ஹென்றி, ராய்டன் மைக்கேல், சிஹோடோ அலெக்ஸ் ஆகியோரும், மலேசியாவின் கமரூதின் கோலடித்தனா்.

பிரான்ஸ் தொடா் வெற்றி: சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் கடந்த முறை ரன்னா் பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை போராடி வீழ்த்தியது. பிரான்ஸ் தரப்பில் கேலியா்ட் டாம், லாராசூரி கேபின், லிடியாா்ட் ஜேம்ஸ் ஆகியோரும், வங்கதேசத் தரப்பில் அப்துல்லா, அமிருல் இஸ்லாம் ஆகியோா் கோலடித்தனா். ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடும் வகையில் வங்கதேச அணியினா் ஆடினா்.

சிலி முதல் வெற்றி: இரண்டாம் ஆட்டத்தில் சிலி-ஓமன் அணிகள் மோதின. இதில் சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியில் டூயிஸ்பொ்க் 10-ஆவது நிமிஷத்திலும், டபோா்கா டாமஸ் 47-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

ஆஸ்திரேலியா வெற்றி: மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-கொரிய அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸி. அணியில் ஜேக்ஸன் டங்கன் 17-ஆவது நிமிஷத்திலும், குரோபெல்லா் 35-ஆவது நிமிஷத்திலும், ஸ்டேங்கா் டெகின் 53=ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

X
Dinamani
www.dinamani.com