

பார்சிலோனாவின் இளம் கால்பந்து வீரர் லாமின் யமால் (18 வயது) தனது யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
ஒரே நாளில் இவரது பக்கத்தை 960 ஆயிரம் (9.6 லட்சம்) பேர் சப்ஸ்கிரைப் செய்து அசத்தியுள்ளார்கள்.
யார் இந்த லாமின் யமால்?
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லாமின் யமால் பார்சிலோனா எஃப்சி அணிக்காக விளையாடி வருகிறார்.
இளம் மெஸ்ஸி என்று ரசிகர்களால் புகழப்படும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக அறியப்படுகிறார். லா மசியா எனப்படும் பார்சிலோனாவின் சிறுவர்களுக்கான பட்டறையில் இருந்து வந்தவர்.
இதுவரை, பார்சிலோனாவிற்க்காக 126 போட்டிகளில் 34 கோல்கள், 45 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார்.
தேசிய அணிக்காக 23 போட்டிகளில் 12 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.
ஹோம் டூரில் தொடங்கிய யமால்
ஸ்பெயின் வடக்குப் பகுதியான கடோலன் பகுதியில் 16 வயது முதல் தனது உறவினர் முகமது அப்டே, நண்பர் சோயிஃப் உடன் லாமின் யமால் வசித்து வருகிறார்.
விரைவில் தனது புதிய ஆடம்பர வீட்டுற்கு குடியேற இருக்கிறார். அந்த வீடு சுமார் 12 மில்லியன் டாலரில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீட்டைதான் லாமின் யமால் தனது யூடியூப் பக்கத்தில் முதல் விடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த விடியோ ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
காதலி இல்லை...
அந்த விடியோவில் யாமல் பேசியதாவது:
இந்த அறையில் வாசனை மிகவும் முக்கியம். வெண்ணிலா வாசனை திரவியம் எனக்கு பிடிக்கும். அறையில் அனைத்துமே வெண்ணிலாவில் இருக்கும். எனது சோப்பும் அதே வகைமைதான்.
விரைவில் தூங்கி பாதி இரவில் முழிப்பேன். நொறுக்குத்தீனி தின்பேன். அதுதான் இரவில் என்னுடைய திட்டமாக இருக்கும். அதனால்தான் எனக்கு காதலி இல்லை எனக் கூறினார்.
நிக்கி நிக்கோல் என்ற பெண்ணுடன் சில காலமாக காதலில் இருந்துவந்த லாமின் யமால் கடந்த நவம்பரில் பிரேக்-அப் செய்துவிட்டதாகக் கூறப்பட்டது. தற்போது. அது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.