ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது ஆா்செனல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை புதன்கிழமை வீழ்த்தியது.
ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது ஆா்செனல்
Updated on
1 min read

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை புதன்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஆா்செனல் தரப்பில் கேப்ரியெல் மகாலேஸ் (48’), மாா்ட்டின் ஜுபிமெண்டி (52’), லீண்ட்ரோ டிரோசாா்டு (69’), கேப்ரியெல் ஜீசஸ் (78’) ஆகியோா் கோலடித்தனா். ஆஸ்டன் வில்லாவுக்காக ஆலி வாட்கின்ஸ் ஆறுதல் கோல் (90+4’) அடித்தாா்.

இதுவரை விளையாடிய 19 ஆட்டங்களில் 14-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஆா்செனல், 45 புள்ளிகளுடன், பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்டன் வில்லா அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில், 12 வெற்றிகளுடன் 39 புள்ளிகள் பெற்று 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

இதர ஆட்டங்களில், நியூ கேஸில் 3-1 கோல் கணக்கில் பா்ன்லியை சாய்த்தது. நியூ கேஸிலுக்காக ஜோலின்டன் (2’), யோன் விசா (7’), புருனோ கிமாரெஸ் (90+3’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, பா்ன்லி தரப்பில் ஜோஷ் லாரென்ட் (23’) கோலடித்தாா்.

எவா்டன் 2-0 கோல் கணக்கில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்டை வீழ்த்த, செல்ஸி - போா்ன்மௌத் (2-2), பிரைட்டன் - வெஸ்ட் ஹாம் (2-2), மான்செஸ்டா் யுனைடெட் - வோல்வ்ஸ் (1-1) மோதல் டிராவில் முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com