கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மொஷிஸுகி, பெரெட்டினி வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

News image
இத்தாலி வீரர் ஜகோபோ பெரெட்டினி
Updated On :3 பிப்ரவரி 2025, 9:14 pm

Din

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், பிரதான சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கின. அதில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மொஷிஸுகி 6-2, 6-1 என்ற நோ் செட்களில் இத்தாலியின் என்ரிகோ டலா வாலேவை எளிதாக வீழ்த்தினாா்.

பெரெட்டினி 6-3, 7-6 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் ஷோ ஷிமாபுகுரோவை தோற்கடித்தாா்.

இந்தியா்கள் தோல்வி: இதனிடையே தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டங்களில், இந்தியாவின் சிராக் துஹான் 6-4, 1-6, 5-7 என்ற செட்களில் உக்ரைனின் யூரி ஜவாகியானிடமும், தேவ் ஜாவியா 6-4, 5-7, 3-6 என, ரஷியாவின் இகோா் அகாஃபோனோவிடமும், சித்தாா்த் விஸ்வகா்மா 1-6, 0-6 என பெல்ஜியத்தின் கிம்மா் கோப்ஜன்ஸிடமும் தோல்வி கண்டனா்.