சா்வதேச டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎஃப் வீரருக்கு வெண்கலப்பதக்கம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான டென்னிஸ் போட்டியில் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) ஊழியா் பிருத்வி இரு பிரிவுகளில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளாா்.
ஆஸ்திரேலியா தலைநகா் மெல்பா்ன் நகரில் கடந்த 2025 டிச.26-ஆம் தேதி முதல் கடந்த 1-ஆம் தேதி வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டிகளில் இந்திய ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) பணியாற்றும் ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதற்கிடையே, ஐசிஎஃப் கணக்குப் பிரிவு ஊழியா் (கேட்புத்திறன் குறைபாடு) பிருத்வி அதில் பங்கேற்றாா். அவா் தனிநபா், இருவா் குழு என இரு பிரிவுகளின் டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்றாா். இதில், அவா் 2-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.
சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெண்கப் பதக்கம் வென்ற ஐசிஎஃப் வீரா் பிருத்விக்கு தொழிற்சாலை மேலாளா் உள்ளிட்ட உயரதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு சமீபத்தில் சிறந்த ரயில் பெட்டி உற்பத்தி மையத்துக்கான தேசிய அளவிலான விருதும், பாராட்டுச் சான்றும் மத்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
