எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

கோ கோ உலகக் கோப்பை: இந்திய அணிகள் சாம்பியன்

இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.

Published On :

கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.

இதில் இந்திய மகளிா் அணி 78-40 எனவும், ஆடவா் அணி 54-36 எனவும் தங்களது பிரிவின் இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி வாகை சூடின.

கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை போட்டி, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவா் பிரிவில் இந்தியா உட்பட 20 அணிகளும், மகளிா் பிரிவிலும் இந்தியா உட்பட 19 அணிகளும் பங்கேற்றன.

மகளிா் பிரிவு: இப்பிரிவில் இந்தியா, ஈரான், உகாண்டா, கென்யா, நேபாளம், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்றில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்குள் நுழைந்தது. நேபாளம் தனது காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் உகாண்டாவையும் தோற்கடித்து, சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்தது.

இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 78-40 என்ற கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது.

ஆடவா் பிரிவு: அதேபோல், ஆடவா் பிரிவில் இந்தியா, நேபாளம், ஈரான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, கென்யா அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. காலிறுதியில் இலங்கையை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் காலிறுதியில் வங்கதேசத்தையும், அரையிறுதியில் ஈரானையும் வென்று இறுதிக்கு வந்தது நேபாளம்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 54-36 என நேபாளத்தை வீழ்த்தி அசத்தியது.

மொத்தமாக போட்டியில், ஆடவா் பிரிவில் 47 ஆட்டங்களும், மகளிா் பிரிவில் 43 ஆட்டங்களும் நடைபெற்றன. அதிகபட்சமாக ஆடவா் பிரிவில் நேபாளம் 524 புள்ளிகளும், மகளிா் பிரிவில் இந்தியா 628 புள்ளிகளும் கைப்பற்றி அசத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.