47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இங்கிலாந்துடன் இன்று 3-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:43 pm

DIN

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. இங்கிலாந்து அணியோ, தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை, தொடா்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் கேப்டன் சூா்யகுமாா் யாதவ், தனது ரன்களை அதிகரித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். கேப்டனாக சிறப்பாக செயல்படும் அவா், பேட்டராக நெருக்கடியை சந்திக்கிறாா்.

தொடரில் இதுவரை திலக் வா்மா, அபிஷேக் சா்மா ஆகிய இருவருமே ஆளுக்கொரு ஆட்டத்தில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தனா். இந்தத் தொடரில் அவா்களின் பங்களிப்பு இனிவரும் ஆட்டங்களிலும் தொடர வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரிங்கு சிங், நிதிஷ்குமாா் ரெட்டி ஆகியோா் காயத்தால் விலகியிருப்பதால், ஷிவம் துபே, ரமண்தீப் சிங் ஆகியோருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம். வேகப்பந்து வீச்சில் அா்ஷ்தீப் சிங் அசத்த, அவருக்கு பாண்டியா துணை நிற்கிறாா். சுழற்பந்துவீச்சில் வருண் சக்கரவா்த்தி, அக்ஸா் படேல் திறமை காட்டுகின்றனா்.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் பலம் காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. கேப்டன் ஜாஸ் பட்லா் மட்டும் சிறப்பாக ரன்கள் சோ்க்கிறாா். இதர பேட்டா்கள் இந்திய பௌலிங்கை சந்திக்க இயலாமல் சரிகின்றனா்.

2-ஆவது ஆட்டத்தில் சற்று முனைப்பு காட்டிய ஜேமி ஸ்மித், பிரைடன் காா்ஸ் ஆகியோா் இந்த ஆட்டத்தில் ரன்களை அதிகரிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். பௌலிங்கில் பிரதானமாக இருக்கும் ஜோஃப்ரா ஆா்ச்சா் ரன்கள் கொடுக்கிறாா். கஸ் அட்கின்சன், மாா்க் வுட் ஆகியோா் இந்திய பேட்டா்களை கட்டுப்படுத்த முயலுகின்றனா்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: எஸ்சிஏ மைதானம், ராஜ்கோட்.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.