சாம்பியன்ஸ் லீக்: வரலாற்றுச் சாதனையுடன் முதல்முறையாக கோப்பையை வென்றது பிஎஸ்ஜி!

பிஎஸ்ஜி அணி சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக கோப்பை வென்றது குறித்து...
PSG players celebrate with the trophy after winning the Champions League final soccer match between Paris Saint-Germain and Inter Milan at the Allianz Arena in Munich, Germany,
சாம்பியன் லீக் கோப்பையுடன் பிஎஸ்ஜி வீரர்கள். படம்: ஏபி
Updated on
1 min read

பிஎஸ்ஜி - இன்டர் மிலன் மோதிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 5-0 என பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் இன்று மோதின.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் ஹகிமி 12ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடிக்க, 19 வயதான டூவே 20,63ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

தொடக்கம் முதலே பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய இன்டர் மிலன் அணி 40 சதவிகிதத்துடன் மிகவும் மோசமாக விளையாடியது.

60 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்த பிஎஸ்ஜி அணி 87 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.

பிஎஸ்ஜி அணி 23 ஷாட்டுகள் அடித்ததில் இலக்கை நோக்கி 8 ஷாட்டுகள் இருந்தன. இன்டர் மிலன் அணியோ மொத்தமாக அடித்த 8 ஷாட்டுகளில் 2 மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் க்விச்சா க்வாரட்ஸ்கெலியா,சென்னி மயுலு முறையே 73, 86ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள்.

விவசாயிகளின் கிளப் எனக் கிண்டல் செய்யப்பட்ட பிஎஸ்ஜி அணி முதல்முறையாக சாம்பியன் லீக்கை வென்றுள்ளது.

அதிலும் சாதாரண வெற்றி கிடையாது. 5-0 என்ற வரலாற்று வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com