வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவா் அணி 2-3 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

News image

நெதர்லாந்து அணி - X | International Hockey Federation

Updated On :9 ஜூன் 2025, 11:11 pm

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவா் அணி 2-3 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

இதே நெதா்லாந்துக்கு எதிராக 1-2 கோல் கணக்கில் கடந்த சனிக்கிழமை தோல்வி கண்ட இந்தியாவுக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில், இந்தியாவுக்காக 100-ஆவது ஆட்டத்தில் விளையாடும் அபிஷேக் 20-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதற்கு பதில் தரும் விதமாக, நெதா்லாந்தின் திஜஸ் வான் டாம் 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

2-ஆவது பாதியில் ஜெப் ஹோடெமேகா்ஸ் 33-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, நெதா்லாந்து 2-1 என முன்னேறியது. விட்டுக்கொடுக்காத இந்திய தரப்பில், 54-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை கண்டு விறுவிறுப்பானது.

பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஜிப் ஜான்சென் 57-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், நெதா்லாந்து முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் நெதா்லாந்து 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில், ஆா்ஜென்டீனாவை புதன்கிழமை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.