நேஷன்ஸ் லீக் தோல்வி எதிரொலி... சிறுவன் லாமின் யமாலை விமர்சிக்கும் ரொனால்டோ ரசிகர்கள்!

ஸ்பெயினின் 17 வயது வீரர் லாமின் யமாலை விமர்சிக்கும் ரொனால்டோ ரசிகர்கள் குறித்து...
Ronaldo with Lamune Yamal.
ரொனால்டோ, லாமின் யமால். படம்: எக்ஸ் / யுஇஎஃப்ஏ யூரோ
Published on
Updated on
1 min read

நேஷன்ஸ் லீக் தோல்வி எதிரொலியால் ஸ்பெயினின் 17 வயது வீரர் லாமின் யமாலை ரொனால்டோ ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 2-2 என சமனில் முடிய பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என வென்றது.

இந்தப் போட்டியில் லாமின் யமால் தனது சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. குறிப்பாக போர்ச்சுகலின் நோனோ மெண்டிஸ் லாமின் யமாலை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார்.

இத்தனைக்கும் ஸ்பெயினின் முதல் கோல் அடிக்க லாமின் யமால் பாஸ் செய்த பந்துதான் உதவியது என்றாலும் அந்தச் சிறுவனிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அடுத்த மெஸ்ஸி என்று ரசிகர்கள் புகழ்வதே இதற்குக் காரணமாக அமைகிறது.

போட்டி சமனில் முடிந்தபிறகு, கூடுதல் நேரத்தில் லாமின் யமால் வெளியேற்றப்பட்டார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நூனோ மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ரொனாடோ ரசிகர்கள் லாமின் யமாலை, “நூனோ மெண்டிஸ் பாக்கெட்டில் தேடினால் கைக்குட்டையுடன் லாமின் யமாலும் தென்படுவார்” எனக் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்த சீசனில் பேலந்தோர் (தங்கப் பந்து) விருதுக்கான பட்டியலில் லாமின் யமால் இருக்கிறார்.

” லாமின் யமால் நல்ல திறமைசாலி. அந்தச் சிறுவனை அவனது போக்கில் விளையாட விடுங்கள்” என ரொனால்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com