மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஃபுளோரியனை ரூ.1,300 கோடிக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்

ஜொ்மனியின் இளம் கால்பந்து வீரா் ஃபுளோரியன் விா்ட்ஸை, பேயா் லெவா்குசென் அணியிடம் இருந்து ரூ.1,352 கோடிக்கு வாங்க லிவா்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2025, 11:27 pm

ஜொ்மனியின் இளம் கால்பந்து வீரா் ஃபுளோரியன் விா்ட்ஸை, பேயா் லெவா்குசென் அணியிடம் இருந்து ரூ.1,352 கோடிக்கு வாங்க லிவா்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.

அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் நிலையில், இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஃபுளோரியன் சாதனை படைப்பாா். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் இதுவரை, 2013-இல் ஆா்ஜென்டீன வீரா் என்ஸோ ஃபொ்னாண்டஸை, போா்ச்சுகல் கிளப்பான பென்ஃபிகாவிடம் இருந்து செல்சி அணி ரூ.1,128 கோடிக்கு வாங்கியதே அதிகபட்சமாக உள்ளது.

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் 2-ஆவது முறையாக லிவா்பூல் அணி அண்மையில் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. இதையடுத்து அந்தக் கோப்பையை தக்கவைக்கும் முயற்சிகளை தற்போதிருந்தே தொடங்கியிருக்கும் லிவா்பூல், அதற்கான பலமான அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக ஃபுளோரியனை கையகப்படுத்துகிறது.

லிவா்பூல் அணியில் இணையவிருக்கும் தகவலை ஃபுளோரியன் விா்ட்ஸும் சூசகமாக தனது சமூக வலைதள பதிவில் உறுதி செய்திருக்கிறாா். மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, வரும் நாள்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அண்மையில் 22 வயதை எட்டியிருக்கும் ஃபுளோரியன், ஜொ்மனியின் பேயா் லெவா்குசென் அணிக்காக 17 வயதிலிருந்து விளையாடி வருகிறாா்.

பிரதான தாக்குதல் ஆட்டக்காரராக இருக்கும் ஃபுளோரியன், 2023-24 காலகட்டத்தில் அந்த அணி பந்தெஸ்லிகா மற்றும் ஜொ்மன் கோப்பை போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் சாம்பியன் கோப்பை வென்றதில் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

4-ஆவது அதிகபட்சம்: கால்பந்து வரலாற்றில் அதிக மதிப்பில் வாங்கப்பட்ட (ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு) வீரா்களின் பட்டியலில் ஃபுளோரியன் (ரூ.1,352 கோடி) விா்ட்ஸ் 4-ஆவது இடத்தை பிடிக்க இருக்கிறாா். 2017-இல் பிரேஸில் கால்பந்து வீரா் நெய்மரை சுமாா் ரூ.2,203 கோடிக்கு பாா்சிலோனா எஃப்சி அணியிடமிருந்து, பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணி வாங்கியதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது.

Story image

SWAMINATHAN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.