
லிவர்பூல் கால்பந்து அணி வீரர் முகமது சாலா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
பிரீமியர் லீக்கில் சவுத்தாம்ப்டன் கால்பந்து கிளப் உடன் லிவர்பூல் அணி நேற்றிரவு மோதியது. இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முகமது சாலா பெனால்டி வாய்ப்பில் 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முகமது சாலா.
கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமான லிவர்பூல் அணிக்காக முகமது சாலா விளையாடி வருகிறார்.
முகமது சாலா படைத்த சாதனைகள்
எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலாவுக்கு 32 வயதாகிறது. சவுத்தாம்ப்டன் உடன் 2 கோல்கள் அடித்ததன் மூலம் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் (184) அடித்தவர்கள் பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
லிவர்பூல் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 242 கோல்களுடன் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
எகிப்திய அரசன்
லிவர் பூல் அணிக்காக ஒரு சீசனில் அதிக கோல்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
27 கோல்கள், 17 அசிஸ்ட்டுகள் என 44 கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.
◎ 44 - முகமது சாலா ( (2024/25)
◎ 43 - லூயிஸ் சௌரஸ் (2013/14)
◎ 42 - முகமது சாலா (2017/18)
ரசிகர்கள் இவரை எகிப்திய அரசன் என புகழ்ந்து வருகிறார்கள். இந்தாண்டு பேலன் தோர் விருதுக்கான போட்டியில் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.