ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம்..! ஆபாசமாகப் பேசிய பிரேசில் கால்பந்து வீரர்!

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் எனக் கூறியுள்ளார்.

News image
ரபீனியா. - படம்: இன்ஸ்டா / ரபீனியா.
Updated On :25 மார்ச் 2025, 1:34 pm

DIN

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ஆர்ஜென்டீனாவை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வீழ்த்துவோம் எனக் கூறியுள்ளார்.

தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி சமீபத்தில் உருகுவே அணியை வென்றது. அடுத்தாக நாளை காலை 5.30 மணிக்கு பிரேசிலை சந்திக்கிறது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் என பிரேசிலின் நட்சத்திர வீரர் ரபீனியா தெரிவித்துள்ளார்.

ரொமாரியோ உடனான நேர்காணலில் ரபீனியா பேசியதாவது:

ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம்

நாங்கள் ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம். நிச்சயமாக இதைச் செய்வோம். களத்திலும் சரி களத்துக்கு வெளியேவும் நாங்கள் அவர்களை வீழ்த்துவோம். (ஆங்கில எழுத்து எஃப்-இல் தொடங்கும் ஆபாச வார்த்தையில் பேசினார்).

ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக நான் நிச்சயமாக கோல் அடிப்பேன். எனக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் நான் வெளிப்படுத்துவேன் என்றார்.

2021-இல் ஆர்ஜென்டீனா வீரர் நிகோலஸ் ஓடமென்டி பிரேசில் வீரர் ரபீனாவை தனது முழங்கையினால் இடித்தார். அதனால் ரபீனாவுக்கு 5 தையல்கள் போட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டீனாவுக்கு தேவை ஒரு டிரா

தென்னமரிக்க கால்பந்து கூட்டமைப்பில் இருந்து 10 அணிகளில் டாப் 6 அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும்.

இதில் ஆர்ஜென்டீனா அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பிரேசில் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.

பிரேசிலுடன் ஆர்ஜென்டீனா டிரா செய்தாலே உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.