
போட்டிக்கு முன்பாக தகாத வார்த்தை பேசிய இளம் பிரேசில் வீரர் ரபீனியாவுக்கு மூத்த ஆர்ஜென்டீன வீரர் நிகோலஸ் ஒடமென்டி அறிவுரை வழங்கியுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் ரபீனியா ஆர்ஜெனடீனாவை வீழ்த்துவோம். மேலும் ஆங்கில எழுத்து எஃப்-இல் தொடங்கும் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தினார்.
இது உலகம் முழுவதும் சர்ச்சையானதால் இந்தப் போட்டிக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீன அணி பிரேசிலை 4-1 என வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.
போட்டி நடுவிலே ஆர்ஜென்டீன, பிரேசில் வீரர்களுக்கு வாக்குவாதங்கள் நடைபெற்றன. இரு அணிகளுக்குமே தலா 5 மஞ்சள் கார்டுகள் கொடுக்கப்பட்டன.
ரபீனியாவுக்கு 37 வயதாகும் நிகோலஸ் ஒடமென்டி “ரபீனியாவை குறைவாக பேசச் சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.
மற்றுமொரு ஆர்ஜென்டீன வீரர் ஜூலியன் அல்வராஸ், “ இது கிளாசிக்கான போட்டி. நாங்கள் இப்படித்தான் விளையாடுவோம். பிரேசில் வீரர்கள் போட்டிக்கு மசாலாவை சேர்த்துவிட்டார்கள். அது தேவையற்றதென நினைக்கிறேன். ஆனால், நாங்கள் சிறப்பாக விளையாடினோம். தன்னடக்கத்துடன் அவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.