ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

தேசிய சாதனை படைத்த இந்திய வீரர்! 22 மில்லி செகன்டில் இழந்த உலக சாம்பியன்ஷிப் தகுதி!

இந்திய வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

குல்வீர் சிங் - கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக தடகள கான்டினென்டல் டூரில் பங்குபெற்ற இந்திய வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் 27:00:22 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக கடந்தாண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் இவரே 27:14.88 வினாடிகளில் வெண்கலத்தை வென்றிருந்தார்.

தற்போது, குல்வீர் சிங்கே தனது சொந்த சாதனையை முறியடித்து இந்திய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பு இழப்பு!

26 வயதாகும் குல்வீர் சிங் உலக தடகள கான்டினென்டல் டூரில் 20 மில்லி செகன்டில் உலக சாம்பியன்ஷிப் தகுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

கடந்தாண்டு ஜப்பானில் ஓடியதைவிட வேகமாக ஓடினாலும் உலக சாம்பியன்ஷிப் தகுதிக்கான வாய்ப்பை 20 மில்லி செகன்டில் ( மில்லி வினாடி) இழந்தது இந்தியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது விடியோவை இந்திய தடகள கூட்டமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து தேசிய சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.