4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அதிவேக ஹாட்ரிக் கோல்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய அலெக்சாண்டர் சோர்லோத்!

லா லீகா கால்பந்து தொடரில் அதிவேகமாக ஹாட்ரிக் கோல் அடித்தது குறித்து...

News image

அலெக்சாண்டர் சோர்லோத் - படம்: எக்ஸ் / லா லீகா.

Updated On :11 மே 2025, 11:20 am IST

லா லீகா கால்பந்து தொடரில் அதிவேகமாக ஹாட்ரிக் கோல் அடித்து அத்லெடிகோ மாட்ரிட் வீரர் அலெக்சாண்டர் சோர்லோத் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

லா லீகா கால்பந்து தொடரில் அத்லெடிகோ மாட்ரிட், ரியல் சோசிடாட் அணிகள் இன்று மோதின.

இந்தப் போட்டியில் அலெக்சாண்டர் சோர்லோத் 7,10,11 ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் மொத்தமாக 4 கோல்கள் அடித்தார். இறுதியில் 4-0 என அத்லெடிகோ மாட்ரிட் அபார வெற்றி பெற்றது.

3 நிமிஷங்கள் 57 நொடிகளில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 30 நிமிஷங்களில் 4 கோல்கள் அடித்து முடித்தார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த 29 வயதான அலெக்சாண்டர் சோர்லோத் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக 2024 முதல் விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் லா லீகா தொடரில் 32 போட்டிகளில் 17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்பாக 1941ஆம் ஆண்டு 15 நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடிக்கப்பட்டது. தற்போது, இந்தச் சாதனையை அலெக்சாண்டர் சோர்லோத் முறியடித்துள்ளார்.

லா லீகா புள்ளிப் பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் 70 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.