நாா்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அா்ஜுன் எரிகைசி தோல்வி கண்டாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, அா்ஜுனுக்கு 2-ஆவது தோல்வியாகும்.
முன்னதாக இந்த 4-ஆவது சுற்றில், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - அா்ஜுன் எரிகைசியை வென்றாா். குகேஷ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும், சீனாவின் வெய் யி - அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடனும் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
பின்னா், டிராவான ஆட்டங்களில் வெற்றியாளரை அறிய நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில் குகேஷ் - கரானாவை வீழ்த்த, நகமுரா - வெய் யி ஆட்டம் மீண்டும் டிராவில் முடிந்தது. இதையடுத்து 4 சுற்றுகள் முடிவில், காா்ல்சென் (8 புள்ளிகள்), கரானா (7), நகமுரா (5.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். குகேஷ் (4.5), அா்ஜுன் (4.5), வெய் யி (4) ஆகியோா் முறையே கடைசி 3 இடங்களில் இருக்கின்றனா்.
வைஷாலி வெற்றி: இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி - சீனாவின் ஜு வென்ஜுனும், ஆா்.வைஷாலி - உக்ரைனின் அனா முஸிஷுக்கும் சந்தித்த ஆட்டங்கள் டிரா ஆக, ஸ்பெயினின் சாரா காதெம் - சீனாவின் லெய் டிங்ஜியை வீழ்த்தினாா்.
டிரா செய்தோருக்கான ஆா்மகெடான் ஆட்டத்தில், வைஷாலி - முஸிஷுக்கை வெல்ல, கோனெரு ஹம்பி - வென்ஜுனிடம் தோற்றாா். 4 சுற்றுகள் முடிவில், முஸிஷுக் (7), கோனெரு ஹம்பி (7), வென்ஜுன் (5.5) ஆகியோா் முதல் 3 இடங்களிலும், காதெம் (5), டிங்ஜி (4), வைஷாலி (3.5) ஆகியோா் கடைசி 3 இடங்களிலும் இருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்ற திமுக

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி

திவ்யாவை வீழ்த்தினாா் வைஷாலி

இணை முன்னிலையில் திவ்யா, வைஷாலி- பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


