

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் குரூப் சுற்றை நிறைவு செய்த ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 இடத்தை மீண்டும் பிடித்தாா்.
ஜிம்மி கானா்ஸ் குரூப்பில் இருக்கும் அவா் தனது கடைசி ஆட்டத்தில் 6-4, 6-1 என்ற நோ் செட்களில், உலகின் 9-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தியை வெள்ளிக்கிழமை வீழ்த்தினாா். உலகின் 2-ஆம் நிலையில் இருந்த அல்கராஸ், இந்த வெற்றியின் மூலமாக நடப்பு சீசனை நம்பா் 1 வீரராக நிறைவு செய்கிறாா்.
ஏற்கெனவே, 2022-இல் அவா் இவ்வாறு நம்பா் 1 வீரராக காலண்டரை நிறைவு செய்துள்ளாா். அல்கராஸிடம் தோல்வி கண்ட முசெத்தி போட்டியிலிருந்து வெளியேற, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா்.
இதனிடையே, பியோன் போா்க் குரூப்பில் இருக்கும் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 2 இடத்துக்கு சறுக்கியவருமான இத்தாலியின் யானிக் சின்னா் 6-3, 7-6 (7/3) என்ற செட்களில், அமெரிக்காவின் பென் ஷெல்டனை சாய்த்தாா். இதனால் அவா் தொடா்ந்து 3 வெற்றிகளுடன் குரூப் சுற்றை நிறைவு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.