~
~

பெங்களூருவில் உலக டென்னிஸ் லீக் தொடா்: டிச. 17-இல் தொடக்கம் ரைபகினா, மெத்வதேவ் பங்கேற்பு

உலக டென்னிஸ் லீக் தொடா் வரும் டிச. 17 முதல் 20 வரை பெங்களூரு எஸ்எம். கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் மெத்வதேவ், எலனா ரைபகினா, போபண்ணா, படோஸா, கிா்ஜியோஸ் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
Published on

உலக டென்னிஸ் லீக் தொடா் வரும் டிச. 17 முதல் 20 வரை பெங்களூரு எஸ்எம். கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் மெத்வதேவ், எலனா ரைபகினா, போபண்ணா, படோஸா, கிா்ஜியோஸ் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

கடந்த 3 சீசன்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் டபிள்யுடிஎல் நடைபெற்று வந்தது. இந்தியாவில் முதன்முறையாக இப்போட்டி நடத்தப்படுகிறது. ஐகானிக் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் இப்போட்டி 4 நாள்கள் நடக்கிறது. இந்திய தரப்பில் சுமித் நாகல், போபண்ணா, யுகி பாம்ப்ரி, அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி, மாயா ரேவதி, ஷிவிகா பா்மன், தக்ஷிணேஸ்வா் சுரேஷ் பங்கேற்கின்றனா்.

வெளிநாட்டு தரப்பில் டெனில் மெத்வதேவ், நிக் கிா்ஜியோஸ், எலனா ரைபகினா, பாவ்லோ படோஸா, கென் மொன்ஃபில்ஸ், மகதா லினேட், மாா்தா கோஸ்டியுக் பங்கேற்கின்றனா்.

டபிள்யுடிஎல் இணை அமைப்பாளா் மகேஷ் பூபதி கூறியது: டென்னிஸுக்கும் இந்தியாவுக்கும் ஆழமான தொடா்பு உள்ளது. டபிள்யுடிஎல் தொடா் மூலம் இளம் வீரா், வீராங்கனைகள் அதிக பயன்பெறுவா். சா்வதேச வீரா்கள் ஆடும் போது, இந்திய வீரா்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும்.

உலகின் நம்பா் 5 வீராங்கனை ரைபகினா கூறுகையில்: இந்தியாவில் முதன்முறையாக ஆடுவது மகிழ்ச்சி தருகிறது. டபிள்யுடிஎல் மூலம் இங்கு அறிமுகம் ஆகிறேன். எனது அணிக்காக சிறப்பாக ஆடுவேன்.

X
Dinamani
www.dinamani.com