

சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், "இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்'-இல் புதன்கிழமை சேர்க்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் ரோட் ஐலேண்டில் உள்ள இந்த அமைப்பானது, டென்னிஸ் விளையாட்டுக்கு சிறப்பாக பங்களித்தோரை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலுக்கு ஃபெடரர் தேர்வு செய்யப்பட்டு, கெüரவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர், இந்த ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்தில் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுவார்.
2022-இல் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற ஃபெடரர், அந்த விளையாட்டின் வரலாற்றில் ஜிம்மி கானர்ஸýக்கு (106) பிறகு அதிக டூர் நிலை பட்டங்கள் (103) வென்றவராக இருக்கிறார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரரான ஃபெடரர், 28 மாஸ்டர்ஸ் பட்டங்களும் வென்றிருக்கிறார். இதுதவிர, தனது உச்ச ஃபார்மில் இருந்தபோது, ஏடிபி தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக தொடர்ந்து 237 வாரங்களுக்கு (2004 பிப்ரவரி - 2008 ஆகஸ்ட்) நீடித்த சாதனையும் அவர் வசம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.