லக்ஷயா, பிரணய் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
லக்ஷயா, பிரணய் முன்னேற்றம்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற வகையில், சீன தைபேவின் சு லி யாங்கை வென்றார்.

தருண் மன்னெபள்ளி 21-13, 17-21, 21-19 என்ற கணக்கில், டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசனை வீழ்த்த, கே.ஸ்ரீகாந்த் 21-19, 19-21, 21-15 என்ற கேம்களில் சீன தைபேவின் லீ சியா ஹாவை வெளியேற்றினார்.

ஹெச்.எஸ்.பிரணய் 6-21, 21-12, 21-17 என்ற வகையில், இந்தோனேசியாவின் யோஹனிஸ் மார்செலினோவை வென்றார். ஆயுஷ் ஷெட்டி 21-11, 21-15 என்ற கேம்களில் கனடாவின் சாம் யுவானை சாய்த்தார். எனினும், கிரண் ஜார்ஜ் 21-11, 22-24, 17-21 என்ற கேம்களில், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வி கண்டார்.

கலப்பு இரட்டையரில், மோஹித் ஜக்லன், லக்ஷிதா ஜக்லன் இணை தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com