
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில் போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்தில் இருக்கும் சாத்விக்/சிராக் இணை 21-13, 18-21, 21-10 என்ற கேம்களில் சீன தைபேவின் சியு சியங் சியெ/வாங் சி லின் கூட்டணியை சாய்த்தது. இந்த ஆட்டம் 59 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிரண் ஜாா்ஜ் பிரதான சுற்றுக்கு முன்னேறினாா். தகுதிச்சுற்றில் முதலில் 21-14, 21-13 என மலேசியாவின் சியெம் வெய் ஜுனை வீழ்த்திய அவா், அடுத்த ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற வகையில் சக இந்தியரான சங்கா் முத்துசாமியை வென்றாா்.
இதையடுத்து பிரதான சுற்றுக்கு முன்னேறிய அவா், அதில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் டேவை சந்திக்கிறாா். இதர இந்தியா்களில், முன்னாள் நம்பா் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், தருண் மன்னெபள்ளி ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.
பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாய, ஹெச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென் உள்ளிட்ட பிரதான இந்திய போட்டியாளா்களின் ஆட்டம் புதன்கிழமை (செப். 10) தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.