ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஸ்வெரெவ், ரூட் முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி

பிரான்ஸில் நடைபெறும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:36 pm

பிரான்ஸில் நடைபெறும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 4-6, 6-4, 7-5 என்ற செட்களில் சிலியின் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸை சந்திக்கிறாா்.

பொ்க்ஸ் முந்தைய சுற்றில், 6-4, 6-1 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா். 6-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 7-6 (7/4), 6-3 என்ற வகையில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சாய்த்தாா்.

3-ஆவது சுற்றில் அலியாசிமே, நாா்வேயின் கேஸ்பா் ரூடை எதிா்கொள்கிறாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ரூட் 7-5, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை வெளியேற்றி, 3-ஆவது சுற்றுக்கு வந்துள்ளாா்.

இதனிடையே, போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 0-6, 0-6 என்ற நோ் செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் மிக மோசமாக தோல்வியைத் தழுவினாா். பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா 7-5, 4-6, 6-3 என்ற கணக்கில், பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில், பெரெட்டினி - ஃபொன்சேகா மோதுகின்றனா்.

11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 4-6, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வெளியேற்றினாா். அடுத்து அவா், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொள்கிறாா்.

செக் குடியரசின் தாமஸ் மசாக் 7-6 (7/2), 6-3 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சாய்த்தாா். ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி 3-6, 6-3, 6-2 என, பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனை வென்றாா். இதில் மசாக் தனது 3-ஆவது சுற்றில், முன்னணி வீரரான இத்தாலியின் யானிக் சின்னரின் சவாலை சந்திக்கிறாா்.