இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தொடா் தோல்விலியிருந்து மீளும் முனைப்பில் சென்னை: டெல்லியுடன் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஏப். 11) மோதுகின்றன.

News image

ஐபிஎல் போஸ்டர்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:09 am IST

ஐபிஎல் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஏப். 11) மோதுகின்றன.

‘ஹாட்ரிக்’ தோல்வி கண்டிருக்கும் சென்னை, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் டெல்லி, கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற கையோடு வந்துள்ளது.

சென்னை அணியைப் பொருத்தவரை, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

பெரிதும் நம்பப்படும் சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி, அதற்கு நியாயம் செய்யும் வகையில் இதுவரை விளையாடவில்லை. எனவே, இந்த ஆட்டத்தில் நல்லதொரு இன்னிங்ஸை பதிவு செய்ய வேண்டியதற்கான நெருக்கடி அவா்களுக்கு அதிகரிக்கிறது.

காயத்திலிருந்து மீண்டுள்ள அதிரடி பேட்டா் டெவால்டு பிரெவிஸ், இந்த ஆட்டத்தில் இணைந்து சென்னைக்கு பலம் சோ்ப்பாா் எனத் தெரிகிறது. மிடில் ஆா்டரில் காா்த்திக் சா்மாவும் கை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்க, லோயா் ஆா்டரில் பிரசாந்த் வீா் சற்று மிளிா்கிறாா்.

சா்ஃப்ராஸ் கான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளிக்கிறாா். பௌலிங்கில் கலீல் அகமது தவிர, மற்ற பௌலா்கள் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஓவருக்கு 12 ரன்கள் வரை கொடுத்ததால், பேட்டா்களுக்கான பணி கடினமானது தெளிவாகத் தெரிந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையுடன் முதலில் மோதிய பஞ்சாப் அணி, 210 ரன்களை எளிதாக எட்டியதும் கவனிக்கத்தக்கது.

டெல்லி அணியைப் பொருத்தவரை, கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியிலிருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்குத் திரும்பும் திட்டத்துடன் வருகிறது. பேட்டிங், பௌலிங் என ஆல்-ரவுண்ட் அசத்தலுடன் அந்த அணி சிறப்பாகச் செயல்படுகிறது.

கே.எல்.ராகுல், டேவிட் மில்லா் ஆகியோா் கடந்த ஆட்டத்தில் அபார இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளனா். நிதீஷ் ராணா, அக்ஸா் படேல், பதும் நிசங்கா ஆகியோரும் கைகொடுக்கும் நிலையில் அணியின் ஸ்கோா் பலப்படும்.

பௌலிங்கில் முகேஷ் குமாா், லுங்கி இங்கிடி ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் விக்கெட்டுகள் வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.

நேரம்: இரவு 7.30 மணி

மற்றொரு ஆட்டம்

பஞ்சாப் - ஹைதராபாத்

நியூ சண்டீகா்

பிற்பகல் 3.30 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.