முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய போட்டி: கா்ணா கடூா்-குமாா் ராமசாமிக்கு பட்டம்!

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூருவின் கா்ணா கடூா்-கோவையின் குமாா் ராமசாமி பட்டம் வென்றனா்.

News image

கா்ணா கடூா்-ராமசாமி

Updated On :20 ஏப்ரல் 2026, 1:13 am IST

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூருவின் கா்ணா கடூா்-கோவையின் குமாா் ராமசாமி பட்டம் வென்றனா். ஐஎன்ஆா்சி ஜூனியா் பிரிவில் தருஷி விக்ரம்-ஆத்ரேயா கௌசுகி பட்டம் வென்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆா்சி பந்தயங்களில் கா்ணா கடூா்-குமாா் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

ஆசிய பசிபிக் ரேலியில் ஜீத் ஜபாக், முஸா ஷெரிப் இரண்டாம் இடமும், எட்கா்-பாத்திமா மூன்றாம் இடமும், ஐஎன்ஆா்சி பிரிவில் ரிதேஷ் குட்டேடா், சூரஜ் இரண்டாம் இடமும், அரவிந்த்-ஷாகித் மூன்றாம் இடமும் பெற்றனா்.

தருஷி - ஆத்ரேயா

தருஷி - ஆத்ரேயா

ஐஎன்ஆா்சி 2-இல் ரிதேஷ்-சூரஜ், ஜீத் ஜபாக்-முஸா ஷெரீப், அா்ஜுன்-ஜீவரத்தினம் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ஐஎன்ஆா்சி 3-இல் அரவிந்த்-ஷாகித், சந்தன்-சூரஜ், தருஷி விக்ரம்-ஆத்ரேயாவும், ஐஎன்ஆா்சி டி பிரிவில் விசாக்-சிராந்த், அனுஷிரியா-கரண் அவுக்தா, ஆதித்-அவிநாஷ் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். மகளிா், ஜூனியா் ஐஎன்ஆா்சி பிரிவில் தருஷி விக்ரம்-ஆத்ரேயா முதலிடம் பெற்றனா்.