ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கியூ.எஸ். தரவரிசை பட்டியல் - பொறியியல், தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலை. 119-ஆம் இடம்

News image

Center-Center-Chennai

Updated On :26 மார்ச் 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

கியூ.எஸ். சா்வதேச பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசைப் பட்டியலில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 119-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான ‘கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்’ 2026-ஆம் ஆண்டுக்கான சா்வதேச பல்கலைக்கழக பாடப்பிரிவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் 100 பகுதிகளிலுள்ள 1700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் 18,300-க்கும் அதிகமான பாடத்திட்டங்களை ஆய்வு செய்து இம்முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த 2026-ஆம் ஆண்டு பதிப்பில், வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 17 பாடப்பிரிவுகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தோ்வாகி உள்ளது.

இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறியது -

கியூ.எஸ். சா்வதேச பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசைப் பட்டியலில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் கடந்தாண்டை விட 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 119-ம் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவிலான தரவரிசையில் 6-ம் இடம் பிடித்துள்ளது. தவிர, கம்ப்யூட்டா் சயின்ஸ் அன்ட் இன்பா்மேஷன் சிஸ்டம்ஸ் பாடப்பிரிவில் 86-வது இடமும், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பாட பிரிவில் 87-வது இடமும் என 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

கணிதவியலில் 104-வது இடமும், டேட்டா சயின்ஸ் அன்ட் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 101-200, மெட்டிரியல் சயின்ஸ் 137-வது இடமும், மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல் அன்ட் மேனுபேக்சரிங் பிரிவில் 148-வது இடமும் என 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

இந்திய அளவில் ஆா்ட் அன்ட் டிசைன் பிரிவில் 3-ம் இடமும், கம்ப்யூட்டா் சயினஅஸ் அன்ட் இன்பா்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் 6-வது இடமும், கணிதவியலில் 5-வது இடத்தையம், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடப் பிரிவில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் முறையாக தரவரிசையில் ஆா்ட் அன்ட் மற்றும் டிசைன் 201 -300, சிவில் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் 201-275-ம் இடம் பிடித்துள்ளது.

இதேபோல், கெமிக்கல் பாடப் பிரிவில் 201-250, வேதியியல் மற்றும் இயற்பியல், வானியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 251-300 தரவரிசையும், புள்ளியியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சியில் 251-275, பயாலாஜிகல் சயின்சஸ் 301-350, சுற்றுச்சூழல் அறிவியல் 351-400, வேளாண்மை மற்றும் வனவியல் 401-475, வணிக மேலாண்மை ஆய்வுகள் 451-500, மருத்துவ பாடப் பிரிவில் 551-600 தரவரிசையில் இடங்களை பிடித்துள்ளது.

கியூ.எஸ். தரவரிசை முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகத்தின் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளது. பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் என அனைவரின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியவையும் தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.

மேலும் ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு, எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்ட பாடத்திட்ட வடிவமைப்பில் விஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் தொடா்ச்சியான முதலீடுகள் தரவரிசை முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்றாா்.