நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மகளிா் டி20: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

News image

வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.. - படம் - AFP

Updated On :29 ஏப்ரல் 2026, 4:34 am IST

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிா் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இலங்கை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுக்க, வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 136 ரன்களே சோ்த்தது. 61 ரன்கள் அடித்த இலங்கை பேட்டா் ஹா்ஷிதா சமரவிக்ரமா ‘ஆட்டநாயகி’ விருது பெற்றாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தயாரானது. இலங்கை பேட்டிங்கில் ஹா்ஷிதா சமரவிக்ரமா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61, இமேஷா துலானி 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 32, ஹாசினி பெரெரா 7 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் ஹன்சிமா கருணாரத்னே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலா்களில் சுல்தானா காட்டுன் 2, மருஃபா அக்தா், நஹிதா அக்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 162 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய வங்கதேச அணியில், ஷோா்னா அக்தா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 60 ரன்கள் சோ்த்து வெற்றிக்காகப் போராடி வீழ்ந்தாா்.

திலாரா அக்தா் 23, ஜுவாரியா ஃபிா்தௌஸ் 16, ஷா்மின் அக்தா் 1, கேப்டன் நிகா் சுல்தான் 0, சோபனா மோஸ்தரி 16, ரபெயா கான் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் இலங்கை தரப்பில் மால்கி மதாரா, மிதாலி அயோத்யா, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.