வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

12 ஆண்டுகள், 20 கோப்பைகள்... ஓய்வை அறிவித்த செல்ஸி கேப்டன்!

செல்ஸி மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு குறித்து...

News image

மகளிர் சாம்பியன்ஸ் லீக் பயிற்சியின்போது மில்லி பிரைட். - ஏபி

Updated On :29 ஏப்ரல் 2026, 5:22 pm IST

செல்ஸி மகளிர் அணியின் கேப்டன் மில்லி பிரைட் (32 வயது) தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மில்லி பிரைட் 12 ஆண்டுகளாக செல்ஸி அணியில் விளையாடி வந்தார். 314 போட்டிகளில் கலந்துகொண்ட மில்லி பிரைட் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார்.

முதன்முதலாக டான்காஸ்டர் ரோவர்ஸ் பெல்ஸ் கிளப்பில் சேர்ந்த மில்லி பிரைட் லோனில் லீட்ஸ் அணியில் இணைந்தார். பின்னர், 2014 முதல் 2026 வரை செல்ஸி அணியில் மட்டுமே விளையாடினார்.

டிஃபென்டரான இவர் செல்ஸி அணிக்கு 314 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மொத்தமாக 20 கோப்பைகளை வென்றுள்ளார். மகளிர் சூப்பர் லீக்கில் 8, எப்ஃஏ கோப்பை 6, லீக்ஸ் கோப்பை 4 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

மகளிர் சூப்பர் லீக்கில் அதிகமுறை விளையாடியவராக (216) சாதனை படைத்துள்ளார். ஓய்வு பெற்றாலும் அணியின் நல்லெண்ண தூதுவராக இருப்பார் என செல்ஸி அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்காக 2016ல் அறிமுகமான 88 போட்டிகளில் விளையாடியுள்ளார். யூரோ 2022ல் சாம்பியன் அணியில் விளையாடினார். 2023 உலகக் கோப்பையில் கேப்டனாகவும் விளையாடினார். ஓய்வு குறித்து பிரைட் கூறியிருப்பதாவது:

செல்ஸியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அதுதான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. ஆனால், தற்போது கால்பந்து விளையாடுவதில் இருந்து விலகுகிறேன்.

என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். வேறு எந்த அணியின் முத்திரைக்கும் நான் சண்டையிட விரும்பவில்லை. புதிய யுகத்திற்குச் செல்ல தயாராகுகிறேன். எப்போதுமே செல்ஸியில்தான் இருப்பேன். ஆனால், வேறு வழியில் இருப்பேன் என்றார்.

Summary

Chelsea captain Millie Bright announces retirement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.