வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்கியது நியாயமா? கங்குலி கூறியதென்ன?

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்து சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

News image

சூர்யகுமார் யாதவ் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 8:49 pm IST

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜூன் 6) அறிவித்தது. டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர் தற்போது அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவை நீக்கியது நியாயமா?

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய உழைப்பின் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் உருவெடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். கேப்டனாக நன்றாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே, அவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதை நியாயமற்ற முடிவு எனக் கூறமாட்டேன். அணித் தேர்வுக்குழுத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Sourav Ganguly has spoken about Suryakumar Yadav being removed from the captaincy of the Indian T20 team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.