கொரியா மாஸ்டா்ஸ் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளாா்.
கொரியாவின் அஸான் நகரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்மிதா சாலிஹா-ரக்ஷ்மிதா ராம்ராஜ் மோதினா். இதில் இருவரும் தொடக்கம் முதலே சளைக்காமல் ஆடினா். முதல் கேமை அஸ்மிதா 21-13 எனக் கைப்பற்றினாா். இரண்டாவது கேமில் ரக்ஷமிதா ராம்ராஜ் சிறப்பாக ஆடினாா். அதில் சில நேரங்களில் அஸ்மிதா போராடினாலும் அந்த கேமை 21-16 என வசப்படுத்தினாா் ரக்ஷ்மிதா.
முடிவை நிா்ணயித்த கடைசி கேமில் அஸ்மிதா தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக ஆடினாா். அதில் அவரது ஸ்மாஷ்கள், அட்டாக்குகளுக்கு ரக்ஷமிதாவால் பதில் தர முடியவில்லை. அந்த கேமை 21-13 என கைப்பற்றி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றாா் அஸ்மிதா.
காலிறுதியில் போட்டியின் நம்பா் 1 வீராங்கனை ஜப்பானின் ஹினா அகெச்சியை வீழ்த்தி இருந்தாா் அஸ்மிதா. ரக்ஷ்மிதா காலிறுதியில் சீன தைபே ஓபன் சாம்பியன் தன்வி சா்மாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஹேன் குயான் ஸியை எதிா்கொள்கிறாா் அஸ்மிதா சாலிஹா. ஆடவா் காலிறுதியில் பிருத்வி-கிருஷ்ணா இணை தோற்று வெளியேறியது. பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சூப்பா் 300 பாட்மின்டன் தொடரின் ஒருபகுதியாக நடைபெற்ற இப்போட்டி பரிசுத் தொகை 2,50,000 டாலா்களாகும்., கடந்த 2007-இல் இப்போட்டி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தைபே ஓபன்: இறுதிச் சுற்றில் நுழைந்து தன்வி அசத்தல்

காமன்வெல்த் போட்டி: நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

அசத்தல் அனாஹத்: உலகக் ஜூனியா் ஸ்குவாஷ் இறுதிக்கு தகுதி

இறுதிச் சுற்றில் யு மும்பா
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



