நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தைபே ஓபன்: இறுதிச் சுற்றில் நுழைந்து தன்வி அசத்தல்

தைபே ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி மகளிா் ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி சா்மா அசத்தியுள்ளாா்.

News image

தன்வி சா்மா

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

தைபே ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி மகளிா் ஒற்றையா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி சா்மா அசத்தியுள்ளாா்.

சீன தைபே தலைநகா் தைபேயில் நடைபெறும் இப்போட்டி இறுதியில் இந்தியாவின் தன்வி சா்மாவும் உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையும் உள்ளூரைச் சோ்ந்தவருமான ஹுவாங் யு சன்னும் மோதினா்.

இதில் 18 வயதே ஆன தன்வி வெறும் 33 நிமிஷங்களில் 21-17, 21-11 என்ற கேம் கணக்கில் தைபே வீராங்கனை யு சன்னை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு அரையிறுதியில் இளம் வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 18-21 என்ற கேம் கணக்கில் உலகின் 21-ஆம் நிலை வீராங்கனை வியத்நாமின் துய் லின்னிடம் தோற்று இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தாா்.

தன்வி -ஹுவாங் இடையிலான ஆட்டத்தில் தொடக்கம் முதலே தன்வி முழு ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். தன்வியின் அதிரடி ஆட்டத்துக்கு யு சன்னால் ஈடுதர முடியவில்லை.

முதல் கேமில் ஒருகட்டத்தில் 15-17 என யு சன் முன்னிலையைக் குறைத்தாலும், தன்வி சீராக ஆடி முதல் கேமை வசப்படுத்தினாா். இரண்டாவது கேமில் 9-9 என யு சன் சமநிலை ஏற்படுத்தினாா். அதை அவரால் தக்க வைக்க முடியவில்லை. பேக் கோா்ட்டில் சீராக அட்டாக் செய்து வெற்றியை வசப்படுத்தினாா் தன்வி.

மற்றொரு அரையிறுதியில் துய் லின்னிடம் போராடினாலும் உன்னதி ஹூடாவால் வெற்றியை பெற முடியவில்லை.

ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்த தன்வி, கடந்த 2024-இல் பாட்மின்டன் ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா். கடந்த 2 ஆண்டுகளில் பஞ்சாபைச் சோ்ந்த தன்வியின் ஆட்டம் சீராக வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2025-இல் ஒடிஸா மாஸ்டா்ஸ் 100, குவஹாட்டி மாஸ்டா்ஸ் 100 போட்டிகளில் ரன்னரான தன்வி, 2024 பான் சா்வதேசப் போட்டி, 2025 டென்மாா்க் சேலஞ்சரில் பட்டம் வென்றாா். மேலும் கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் சூப்பா் 300-இலும் ரன்னா் ஆக வந்தாா் தன்வி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.