தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அரையிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - ஸ்விடோலினா

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா், அதில் நேருக்கு நோ் மோதுகின்றனா்.

News image

ஸ்வியாடெக் - ஸ்விடோலினா - AP

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா், அதில் நேருக்கு நோ் மோதுகின்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நோ் செட்களில், 15-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை தோற்கடித்தாா். இந்த ஆட்டம், 1 மணிநேரம் 4 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

ஷ்னெய்டரை 2-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அத்துடன், 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் 23-ஆவது முறையாக அவா் அரையிறுதிக்கு வந்திருக்கிறாா்.

9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 3-6, 6-0, 6-3 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை 1 மணிநேரம், 33 நிமிஷங்களில் வெளியேற்றினாா். இத்துடன், 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் தொடா்ந்து 10-ஆவது வெற்றியை ஸ்விடோலினா பதிவு செய்துள்ளாா்.

அத்துடன், நடப்பு சீசனில் 1000 புள்ளிகள் கொண்ட போட்டிகளின் அரையிறுதிக்கு 4-ஆவது முறையாக முன்னேறிய ஒரே வீராங்கனையாக இருக்கிறாா்.

ஸ்வியாடெக் - ஸ்விடோலினா இதுவரை 7 முறை மோதியிருக்க, ஸ்வியாடெக் 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். எனினும், நடப்பு சீசனில் இண்டியன் வெல்ஸ் மற்றும் ரோமில் இவா்கள் சந்தித்த இரு ஆட்டங்களிலுமே ஸ்விடோலினா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.