/

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 8, 9ஆவது பதக்கங்களை உறுதி செய்த அன்குஷ், நரேந்தர்!

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் மட்டுமே உறுதியாகியுள்ள 8, 9ஆவது பதக்கங்கள் குறித்து...

News image

அன்குஷ், நரேந்தர் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா.

Updated On :29 ஜூலை 2026, 9:20 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் மட்டுமே இந்தியாவுக்கு 9 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. அதில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பதக்கங்களை அன்குஷ் மற்றும் நரேந்தர் உறுதிசெய்துள்ளார்கள்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இன்றைய நாளில் இந்தியா 2 பதங்களை வென்றதுடன் குத்துச் சண்டையில் மட்டுமே ஐந்து பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆடவர் காலிறுதி 80 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்குஷ் சீஷெல்ஸ் நாட்டின் ஜேட் மைக்காக் உடன் மோதினார். இந்தப் போட்டியில் அனைத்து நடுவர்களுமே அன்குஷுக்கு வெற்றிப்புள்ளிகளை வழங்கி 5-0 என அபார வெற்றியைப் பதிவு செய்தார்.

இதன்மூலம் அன்குஷ் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் 8ஆவது பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இவரது அரையிறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

ஆடவர் காலிறுதி 90க்கும் அதிகமான எடைப் பிரிவில் இந்தியாவின் நரேந்தர் சமோவா நாட்டின் மைக்கேல் செகோ உடன் மோதினார். இந்தப் போட்டியில் நரேந்தருக்கு ஆதரவாக 3 நடுவர்களும் செகோவுக்கு ஆதரவாக 2 நடுவர்களும் ஒரு நடுவர் சமமான புள்ளிகளையும் வழங்கியதால், நரேந்தர் 3-2 என வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியுன் இதன் மூலம் நரேந்தர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இவரது அரையிறுதி ஆட்டம் ஆக.1ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

ஏற்கெனவே, இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ள நிலையில், இந்த 9 பதக்கமும் சேர்ந்தால் 21ஆக மாறும். இந்த 9ல் எத்தை தங்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த ஒன்பதில் 4 ஆடவர்கள், 5 பெண்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள்.

Summary

Commonwealth Games 2026: 9 medals assured for India in boxing! Narender and ankush reached semifinals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.