தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அர்ஜுனா விருது வென்ற ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா/காயத்ரி காலிறுதிக்கு முன்னேறியது குறித்து...

Treesa Jolly and Gayatri Gopichand

ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா.

Published On :

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றது.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தனது சொந்த மண்ணில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையினர் ஜப்பானின் ரின் இவானகா / கீ நகானிஷி இணையினருடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் விளையாடினார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய இணையினர் 21- 16, 21- 12 என்ற நேர் கேம்களில் வென்று அசத்தினார்கள். இதன்மூலம் இந்த உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர்கள் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்கள்.

சீன வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் காலிறுதியில் நாளை மதியம் 1.30 மணிக்கு பலப்பரீட்சை செய்யவிருக்கிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அர்ஜுனா விருதுகள் பட்டியலில் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையினர் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Arjuna award winners Treesa Jolly and Gayatri Gopichand seal their spot in the Women's Doubles Quarterfinals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.