
வெஸ்லி ஸோ உடன் புள்ளிகளில் சமன்செய்தும் பிரக்ஞானந்தா சிங்க்ஃபீல்டு கோப்பையை இழந்தது எப்படி?
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றின் ஆட்டம் சமனில் முடிந்தும் பிரக்ஞானந்தா கோப்பையை நழுவவிட்டது குறித்து...

வெஸ்லி ஸோ, பிரக்ஞானந்தா - படங்கள்: எக்ஸ் / கிராண்ட் செஸ் டூர்
அமெரிக்காவில் நடைபெற்ற சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தாவின் ஆட்டம் சமனில் முடிந்தும் கோப்பையை நழுவவிட்டார்.
தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தா இந்த சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடரில் இரண்டாமிடம் பிடித்தார். சமமான புள்ளிகள் இருந்தும் கோப்பையை இழந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிச் சுற்றில் அனீஷ் கிரி உடன் பிரக்ஞானந்தா சமன் செய்தார். அதேபோல் வெஸ்லி ஸோவும் ஜவோகிர் சிண்டாரோவ் உடன் சமன்செய்தார். இதனால் இருவருமே 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து, அவர்களில் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட ஆர்மகெடான் ஆட்டத்தில் இரண்டு ரேபிட் போட்டிகளும் சமனில் முடிவடைந்தது.
பின்னர், கடைசி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் வெஸ்லி ஸோ கறுப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இதில் வெள்ளை நிற காய்களுக்கு 5 நிமிஷங்களும் கறுப்பு நிற காய்களுக்கு 4 நிமிஷங்களும் தரப்படும். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடுபவர் டிரா செய்தாலே அது வெற்றியாகக் கருதப்படும் என்ற விதியினால் வெஸ்லி ஸோ சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிங்க்ஃபீல்டு கோப்பை இறுதிப் பட்டியல்
வெஸ்லி ஸோ - 5.5 புள்ளிகள்
பிரக்ஞானந்தா - 5.5 புள்ளிகள்
சிண்டாரோவ் - 5 புள்ளிகள்
வின்சென்ட் கீமர் - 5 புள்ளிகள்
கரானா - 4.5 புள்ளிகள்
மேக்ஸிம் வச்சியர் - 4.5 புள்ளிகள்
சாம் செவியன் - 4.5 புள்ளிகள்
ஆரோனியன் - 4.5 புள்ளிகள்
அனீஷ் கிரி - 4 புள்ளிகள்
Champion, Wesley!ð#SinquefieldCup #grandchesstour pic.twitter.com/w4afvlPMDq
— Grand Chess Tour (@GrandChessTour) August 19, 2026
Summary
Sinquefield Cup: Praggnanandhaa loses to Wesley So in Armageddon and ends second
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




