நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ரயான் செர்கி, எர்லிங் ஹாலண்ட் தலா 2 கோல்கள்: முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி!

பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியின் அசத்தல் வெற்றி குறித்து...

Manchester City's Erling Haaland celebrates with teammate Rayan Cherki, left, after scoring the opening goal during the English Premier League soccer match between Crystal Palace and Manchester City in London, Friday, Aug. 28, 2026. (AP Photo/Kin Cheung)

ரயான் செர்கி, எர்லிங் ஹாலண்ட் கொண்டாட்டம். - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக் கால்பந்துத் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியது. ஆர்செனல் அணி இதனைவிட 7 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது.

மான்செஸ்டர் சிட்டி அணியும் பேல்ஸ் அணியும் மோதிய போட்டி லண்டனின் செல்ஹர்ஸ்ட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 4-1 என மான்செஸ்டர் சிட்டி வென்றது.

இந்தப் போட்டியில் ரயான் செர்கி 5 நிமிஷ இடைவெளியில் (54’, 59’) 2 கோல்கள் அடித்து அசத்தினார். நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 17, 84ஆவது நிமிஷங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணியினை அபார வெற்றி பெற உதவினார்.

இந்தப் போட்டியில் 72 சதவிகித நேரம் மான்செஸ்டர் சிட்டி அணியே பந்தை தக்கவைத்திருந்தது. இலக்கை நோக்கி 9 முறை அடித்தது. மாறாக, பேலஸ் அணி ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்து ஒரு கோல் பெற்றது.

இந்த அணியில் இருந்த ரோட்ரி பார்சிலோனா அணிக்குச் சென்றதால் மிட்ஃபீல்ட் டிஃபென்சில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக மான்செஸ்டர் சிட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியன் ஆர்செனல் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

Summary

Manchester City overrun Palace to stay perfect in the Premier League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.