சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி 98 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அரசுக்குச் சொந்தமான தொழில்துறைகளில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்திய 98 வயதான முன்னாள் பிரதமர் ஜூ ரோங்கி புதன்கிழமை (ஆக. 12) காலை 11 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார் என சீன அரசின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் இரண்டாவது பொருளாதாரம் மிக்க நாடாக சீனா உருவாகுவதற்கு வித்திட்டவரான முன்னாள் பிரதமர் ஜூ, கடந்த 1998 ஆம் ஆண்டில் 69 ஆம் வயதில் சீனாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்த பிரதமர் ஜூ அரசில் நிலவிய குளறுபடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், அரசின் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
இதன்மூலம், அவருக்கு “பாஸ்” மற்றும் “மேட்மேன் ஜூ” போன்ற புனைப்பெயர்கள் உருவாகின. மேலும், “நான் 100 சவப்பெட்டிகளைத் தயார் செய்துள்ளேன் - 99 ஊழல் மிகுந்த அதிகாரிகளுக்கும், ஒன்று எனக்காகவும்” என அவர் 1998 ஆம் ஆண்டு ஒரு உரையில் கூறியது இன்றளவும் சீனாவில் பிரபலமாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
China's Ex-Chinese Premier Zhu Rongji has passed away at the age of 98.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி விஸ்வ நாத் சர்மா காலமானார்!

1971 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் வசந்த் குமார் பொன்வார் காலமானார்!
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே. நாராயணன் (96) காலமானார்!

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்...
விடியோக்கள்

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு | Aadi Ammavasai | Thithi tarpanam | Srirangam amma mandapam




