டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வென்றது.
டிஎன்பிஎல் 14ஆவது போட்டியாக தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 182/7 ரன்கள் குவித்தது.
சேலம் அணி 11.5 ஓவர்களில் 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஹரிஷ் மற்றும் ஈஸ்வர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதில் அதிகபட்சமாக எஸ். ஹரிஷ் குமார் 57*, ஈஸ்வர் 39 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
சேப்பாக் அணியில் பந்துவீசிய சிலம்பரசன், பிரேம் குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 16.4 ஓவர்களில் 186/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சேப்பாக் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜகதீசன் 78 ரன்கள் குவித்தார். இறுதியில் வந்த ஸ்வப்னில் சிங் 45 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
கேப்டன் ஜகதீசன் ஆட்ட நாயகன் விருது வென்றார். முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற சேப்பாக் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.
Jagadeesan had only one mode today: ðððððð¤! â¡
— TNPL (@TNPremierLeague) August 12, 2026
ð August 04-28 | Dindigul & Chennai.
ðº Watch LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.
ðï¸ Book your tickets now on the District by Zomato app.#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu⦠pic.twitter.com/fr771SgD0Y
Summary
Chepauk Super Gillies cruise through to a brilliant victory against the SKM Salem Spartans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு 127 ரன்கள் இலக்கு; முதல் வெற்றி கிடைக்குமா?

துஷார் ரஹேஜா சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி!

டிஎன்பிஎல்: மிகப்பெரிய வெற்றியுடன் தொடங்கியது நெல்லை ராயல் கிங்ஸ்!

டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பந்துவீச, நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




