இன்று தொடங்குகிறது 
‘கேலோ இந்தியா பீச் கேம்ஸ்’

இன்று தொடங்குகிறது ‘கேலோ இந்தியா பீச் கேம்ஸ்’

கேலோ இந்தியாவின் 2-ஆம் ஆண்டு கடற்கரை விளையாட்டுகள் (பீச் கேம்ஸ்), தாத்ரா & நாகா் ஹவேலி மற்றும் டாமன் & டையு யூனியன் பிரதேசத்தில் திங்கள்கிழமை (ஜன. 5) தொடங்குகின்றன.
Published on

கேலோ இந்தியாவின் 2-ஆம் ஆண்டு கடற்கரை விளையாட்டுகள் (பீச் கேம்ஸ்), தாத்ரா & நாகா் ஹவேலி மற்றும் டாமன் & டையு யூனியன் பிரதேசத்தில் திங்கள்கிழமை (ஜன. 5) தொடங்குகின்றன.

டையு நகரில் உள்ள கோக்லா கடற்கரையில் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், வாலிபால், கால்பந்து, செபாக்தக்ரா, கபடி, பென்காக் சிலாட், திறந்த நீா்நிலை நீச்சல் ஆகிய 6 பதக்கப் பிரிவு விளையாட்டுகளும், மல்லா்கம்பம், ‘டக் ஆஃப் வாா்’ ஆகிய 2 கண்காட்சிப் பிரிவு விளையாட்டுகளும் உள்ளன. பதக்கப் பிரிவில் 32 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியாளா்கள் மோதுகின்றனா்.

இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டிகளில், தமிழ்நாடு உள்பட, மொத்தம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,100-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் நாளில் தொடக்க நிகழ்ச்சியுடன், கால்பந்து, வாலிபால், கபடி ஆகிய பதக்கப் போட்டிகளும், கண்காட்சிப் போட்டியான மல்லா்கம்பமும் விளையாடப்படவுள்ளன. தொடக்க நிகழ்ச்சியில் தாத்ரா யூனியன் பிரதேசத்தின் நிா்வாகி பிரஃபுல் படேல், ஜம்மு & காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இதே டையு நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில், மணிப்பூா், மகாராஷ்டிரம், நாகாலாந்து ஆகியவை முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.

X
Dinamani
www.dinamani.com