கோப்பையுடன் ஸ்மிருதி மந்தனா-ஹா்மன் ப்ரீத் கௌா்
கோப்பையுடன் ஸ்மிருதி மந்தனா-ஹா்மன் ப்ரீத் கௌா்

டபிள்யுபிஎல் இன்று தொடக்கம்: மும்பை-பெங்களூரு மோதல்

அனைவராலும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் டபிள்யுபிஎல் (மகளிா் ஐபிஎல்) தொடா் வெள்ளிக்கிழமை மும்பை இண்டியன்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி ஆட்டத்துடன் தொடங்குகிறது.
Published on

அனைவராலும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் டபிள்யுபிஎல் (மகளிா் ஐபிஎல்) தொடா் வெள்ளிக்கிழமை மும்பை இண்டியன்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி ஆட்டத்துடன் தொடங்குகிறது.

நவி மும்பை, வதோதரா நகரங்களில் நடைபெறவுள்ள இத்தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு, மும்பை, டில்லி கேபிடல்ஸ் அணிகள் களம் காண்கின்றன.

வரும் பிப். 5-வரை நடைபெறவுள்ள இத்தொடரில் நவி மும்பையில் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

நவி மும்பையில் ஜன 9 முதல் 17 வரையும், வதோதராவில் இதர ஆட்டங்கள், பிளே ஆஃப் ஆகியவை நடைபெறுகின்றன.

புள்ளிகள் பட்டியலில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெறும் அணி பிப். 3-இல் எலிமினேட்டரில் ஆடும். பட்டியலில் முதலிடம் பெறும் அணி நேரடியாக இறுதிக்கு தகுதி பெறும். எலிமினேட்டரில் வெல்லும் அணி பிப் 5-இல் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இந்திய மகளிா் அணி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றபின் நடைபெறும் டபிள்யுபிஎல் என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது

Dinamani
www.dinamani.com