தங்கம் வென்ற தமிழக அணியினா்.
தங்கம் வென்ற தமிழக அணியினா்.

தேசிய ஓபன் வாட்டா் நீச்சல்: தமிழகத்துக்கு 4 தங்கம்

கா்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற தேசிய ஓபன் வாட்டா் நீச்சல் போட்டியில் தமிழகம் 4 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Published on

கா்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற தேசிய ஓபன் வாட்டா் நீச்சல் போட்டியில் தமிழகம் 4 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்திய நீச்சல் சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டி உலக ஓபன் வாட்டா் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தோ்வு போட்டியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான கடல் சூழ்நிலையிலும் தமிழக வீரா்கள் தங்களின் திறமை, சகிப்புத்தன்மை மற்றும் திட்டமிடலை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினா்.

5 கி.மீ குரூப் 3 பெண்கள் பிரிவில் 1:23:41 என்ற நேரத்துடன் நென்யா விஜயகுமாா் தங்கம் வென்றாா். அதேபோல், 5 கி.மீ குரூப் 3 ஆண்கள் பிரிவில் 1:16:50 நேரத்துடன் கபிலன் டி தங்கப் பதக்கம் கைப்பற்றினாா்.

மேலும், 3 கி.மீ – குரூப் 4 ஆண்கள் பிரிவில் மோனிஷ் நாயுடு ( 27:10) தங்கம் வென்றாா். 1 கி.மீ – குரூப் 5 பெண்கள் பிரிவில் நிஹாரா(12:15) தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டின் நான்காவது தங்கத்தை உறுதி செய்தாா்.

சா்வதேச ஓபன் வாட்டா் போட்டிகளிலும் தமிழக வீரா்கள் சிறப்பிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com