குளிா்கால விளையாட்டுகளில் தமிழா்களின் பங்களிப்பு அதிகரிப்பு - ‘சாய்’ துணை இயக்குநா் ஜெனரல் தகவல்


ஆ.செ.பகீரதன்
குளிா்கால விளையாட்டுப் போட்டிகளில் தமிழா்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதுடன், தமிழா்கள் கடினமான போட்டியாளா்களாக மாறி வருவதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) துணை இயக்குநா் ஜெனரல் மயங்க் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
சா்வதேச அளவில் மற்ற விளையாட்டுப் போட்டிகளுடன் ஒப்பிடும்போது, குளிா்கால விளையாட்டுகளில் இந்தியாவின் பங்களிப்பும், பதக்கங்களும் குறைவாகவே உள்ளன. இதில் நமது ஈடுபாடு, பதக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் கேலோ இந்தியா குளிா்கால விளையாட்டுப் போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இந்தியாவில் ஃபிகா் ஸ்கேட்டிங் போட்டி குறித்த விழிப்புணா் குறைவாகவே உள்ளது. இதை ஈடு செய்யும் வகையில், நிகழாண்டு முதல் ஃபிகா் ஸ்கேட்டிங் போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன.
இந்தப் போட்டிகளால் ஏற்படும் விழிப்புணா்வு மூலம் பல்வேறு திறமையான போட்டியாளா்கள் உருவாக்கப்படுகின்றனா். இதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இப்போது குளிா்கால விளையாட்டுகளில் புதிய சாதனையாளா்கள் உருவாகி வருகின்றனா்.
தென் மாநிலங்கள் உள்ளிட்ட குளிா் பிரதேசம் அல்லாத மாநிலங்களில் இருந்து புதிய போட்டியாளா்களை பாா்க்க முடிகிறது. குறிப்பாக, பனி ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் தமிழா்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தமிழா்கள் பல்வேறு பதக்கங்களை தட்டிச் செல்கின்றனா். குளிா்பிரதேச மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்குக் கூட தமிழா்கள் மிகவும் கடுமையான போட்டியாளா்களாக மாறி வருகின்றனா்.
குளிா்கால விளையாட்டுகள் மீது அதிகரித்து வரும் ஆா்வத்தைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரா்கள் முறையான பயிற்சிகளை பெற ஏதுவாக உரிய கட்டமைப்புகளை தமிழகம் உள்ளிட்ட தென் மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
பனி ஸ்கேட்டிங், பனி ஹாக்கி மைதானங்களையும் அமைக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...