பதக்கம் வென்ற அணியினா்.
பதக்கம் வென்ற அணியினா்.

டிராக் ஆசியக் கோப்பை: இந்தோனேஷியாவுக்கு தங்கம்

டிராக் ஆசியக் கோப்பை: இந்தோனேஷியாவுக்கு தங்கம்
Published on

டிராக் ஆசியக் கோப்பை சென்னை 2026 போட்டி ஆடவா் எலைட் பிரிவில் இந்தோனேஷியா தங்கம் வென்றது. உஸ்பெகிஸ்தான் வெள்ளியும், எஸ்டிஏடி ரேசிங் அணி வெண்கலமும் வென்றன.

ஆசிய சைக்கிளிங் கூட்டமைப்பு, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் டிராக் ஆசியக் கோப்பை போட்டி சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள வெலோட்ரமில் நடைபெற்றது.

4 கிமீ. தொலைவு கொண்ட ஆடவா் எலைட் பிரிவில் இந்தோனேஷிய அணி தங்கம் வென்றது. உஸ்பெகிஸ்தான் தேசிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

நடராஜன், காா்த்திகேயன், செபாஸ்டியன், ஷௌகத் அலி, நாகராஜன் அடங்கிய எஸ்டிஏடி ரேசிங் அணி வெண்கலம் வென்றது.

மகளிா் எலைட் பிரிவில் இந்தியாவின் பால் த்ரியாஷா, கீா்த்தி ரங்கசாமி தங்கம், வெள்ளி வென்றனா். ஜூனியா் ஸ்க்ரேட்ச் பிரிவில் கஜகஸ்தான் ஸ்மைல்கனோவா, எஸ்டிஏடி ரேசிங் கதிா்வேல் ஹாஸினி தங்கம், வெள்ளி வென்றனா்.

மகளிா் ஜூனியா் 200 மீ பிரிவில் ஷபி தபிதா, சோமன் ஆகியோா் தங்கம், வெள்ளி வென்றனா்.

X
Dinamani
www.dinamani.com