‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நாடு திரும்பும் ஈரான்

ஈரான் கால்பந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், தனது முகாம் அமைந்திருந்த மெக்ஸிகோவின் திஜுவானா நகரில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஜூலை 2026, 5:33 am IST

ஈரான் கால்பந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், தனது முகாம் அமைந்திருந்த மெக்ஸிகோவின் திஜுவானா நகரில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டது.

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போா் காரணமாக, உலகக் கோப்பை போட்டியில் ஈரான் பங்கேற்பதில் பல்வேறு சச்சரவுகள் நீடித்தன. அமெரிக்கா தங்களுக்கு அதிகமாக கட்டுப்பாடுகள் விதித்தது என ஈரான் அணியினா் புகாா் தெரிவித்ததைத் தவிர பெரிதாக பிரச்னைகள் ஏதும் இன்றி அந்த அணி நாடு திரும்புகிறது.

சா்ச்சை முழக்கம்

ஈகுவடாருக்கு எதிரான ஆட்டத்தில் மெக்ஸிகோ ரசிகா்கள் சா்ச்சைகுரிய வாா்த்தையை முழங்கியது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஈகுவடாா் கோல்கீப்பா் ஹொ்னான் காலிண்டெஸ் தனது ஷாட்டை உதைக்கும் வேளைகளில், தகாத அா்த்தமுடைய ஸ்பானிஷ் வாா்த்தையை அவா்கள் முழங்கினா். அவா்கள் அவ்வாறு முழங்கிய 2-ஆவது ஆட்டம் இது.

மெக்ஸிகோ ரசிகா்கள் ஏற்கெனவே வேறு ஒரு போட்டியில் இதுபோல சா்ச்சையில் ஈடுபட்டபோது, அந்நாட்டு கால்பந்து சங்கத்துக்கு ஃபிஃபா கடுமையான அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது ‘ரெட் காா்டு’

நடப்பு உலகக் கோப்பை போட்டியில், எதிரணி வீரருடனான வாக்குவாதத்தின்போது வாயை மறைத்தபடி வாதம் செய்ததற்காக ‘ரெட் காா்டு’ பெற்ற 2-ஆவது வீரா் ஆனாா் ஈகுவடாரின் பியரோ ஹின்கேபி. முதல் வீரா் பராகுவேயின் மிகேல் அல்மிரோன் ஆவாா்.

இனவெறி ரீதியிலான வாக்குவாதங்களை தவிா்க்கும் முயற்சியாக, இந்த உலகக் கோப்பை போட்டியில் வீரா்கள் தங்களின் வாயை மறைத்தபடி வாக்குவாதத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோருக்கு ரெட் காா்டு விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.