FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிரேசிலுக்கு எதிராக ஹாலண்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வானது!

பிரேசிலுக்கு எதிராக எர்லிங் ஹாலண்ட் அடித்த கோல் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

News image

பிரேசிலுக்கு எதிராக ஹாலண்ட் அடித்த சிறந்த கோல்

Updated On :11 ஜூலை 2026, 9:20 pm IST

பிரேசிலுக்கு எதிராக எர்லிங் ஹாலண்ட் அடித்த கோல் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் இந்தாண்டு முதல்முறையாகப் பங்கேற்றுள்ளார். முதல் உலகக்கோப்பைத் தொடரிலேயே தற்போது வரை 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இதில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலுக்கு ஜூலை 5 அன்று நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் அடித்த 2 கோல்களும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசிலுக்கு எதிராக ஹாலண்ட் அடித்த 2-வது கோலை, 16 அணிகள் சுற்றின் சிறந்த கோலாக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன்மூலம், ஹூண்டாய் சிறந்த கோல் விருதுக்கான போட்டியில் ஹாலண்டின் கோல் இணைந்துள்ளது.

’ஹூண்டாய் சிறந்த கோல் விருது’ என்பது தொடரில் சிறந்த கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படுவது. இதனை, ஃபிஃபா அமைப்பினர் தேர்ந்தெடுப்பதில்லை. ஃபிஃபா இணையதளத்தில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அடிக்கப்பட்ட சிறந்த கோல்கள் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மூலம் வாக்கெடுப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும்.

இறுதிப்போட்டி முடிந்து அதுவரை ஒவ்வொரு சுற்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோல்களில், அதிகம் பேரால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கோல் அடித்த வீரருக்கு இந்த விருது வழங்கப்படும்.

அடுத்ததாக, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பின்னர் இதேபோன்று இரு வாக்கெடுப்புகள் நடைபெறும். பின்னர் தொடரின் இறுதிப்போட்டி முடிந்து ஒரு இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

ஒவ்வொரு வாக்கெடுப்பிலும் ஃபிஃபா.காம் தளத்தில் ரசிகர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும்.

முன்னதாக, சுரூப் சுற்றில் காங்கோ அணிக்கு எதிராக உஸ்பெகிஸ்தான் கேப்டன் எல்டோர் ஷோமுரோடோவ் அடித்த கோல் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, 32 அணிகள் கொண்ட சுற்றில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக காபோ வெர்டே அணி வீரர் சிட்னி லோப்ஸ் கப்ரால் அடித்த அற்புதமான கோல் வாக்கெடுப்பில் வென்றது.

இதற்குப் பின்னர், ஹாலண்ட் அடித்த கோல் வெற்றி பெற்றுள்ளது.

Summary

The goal scored by Haaland against Brazil was selected as the best goal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.