கால்பந்து உலகக் கோப்பையின் காலிறுதியில் நார்வே அணி 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று, வெளியேறியது.
இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருக்கவே, கூடுதல் நேரத்தில் ஜூட் பெல்லிங்கம் கோல் அடிக்கவே, நார்வே அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் முதல் பாதிக்கு முன்பாக நார்வே வீரர் சோர்லோத் பந்தை எதிரணியின் பாக்ஸிற்குள் கொண்டுசென்று, ஹாலண்டுக்கு பாஸ் செய்யாமல் அவரே கோல் அடிக்க முயற்சித்து வீணாக்கிவிடுவார். இந்த இடத்தில் மட்டும் அவர் பந்தை பாஸ் செய்திருந்தால் முதல் பாதியிலேயே 2-0 என நார்வே முன்னிலை வகித்திருக்கும்.
அடுத்ததாக, இரண்டாம் பாதியில் ஹெர்லிங் ஹாலண்ட் ஃபௌல் செய்ததால் ஒரு கோல் விஏஆர் மூலம் நீக்கப்பட்டது. இங்கிலாந்து அடித்த கோல் சர்ச்சையாக இருக்கிறதென நார்வே ரசிகர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
ஹாலண்ட் கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் வெளியேற்றப்பட்டார். அதீத வெப்பத்தால் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார்.
பந்து திடலில் இருக்கும் காமிராவின் ஒயரில் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விஏஆர் சோதனையில் அப்படி எதுவும் படவில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த மூன்றில் ஒன்றாவது நார்வே அணிக்குச் சரியாக நடந்திருந்தால் அந்த அணி முதல்முறையாக அரையிறுதில் பங்கேற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
This angle of Sørloth ignoring Haaland. The reaction from Haaland says it all man. He was frustrated and disappointed, just like the rest of us. pic.twitter.com/i1sf0SjAH7
— Geronimo Morgans (@GeronimoMorgans) July 12, 2026
How was this goal given as a foul??
— Nuel (@LfcNuel) July 11, 2026
Haaland pushed the England players before the ball was played. Norway are being robbed!!! pic.twitter.com/aqvJOWEq2x https://t.co/QiZ77FBsZY
Summary
Erling Haaland's semi-final dream shattered: What caused Norway's defeat?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









