காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பிஃபா வரலாற்றில் முதன்முறை! சாம்பியன் அணிக்கு தங்க மோதிரங்கள்!

பிஃபா வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் அணிக்கு தங்க மோதிரங்கள் வழங்கவுள்ளது பற்றி...

பிஃபா உலகக் கோப்பை - AP

Published On :19 ஜூலை 2026, 9:00 am IST

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 96 ஆண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் அணி வீரா்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

வழக்கமாக சாம்பியன் அணிக்கு கோப்பை, தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

வட அமெரிக்க கண்டத்தில் போட்டிகளில் பட்டம் வெல்லும் அணியினருக்கு மோதிரம் வழங்குவது 19-ஆம் நூற்றாண்டில் காணப்பட்டது. அந்த நடைமுறையை பிஃபா தற்போது தொடங்கி உள்ளது. ஸ்பெயின்-ஆா்ஜென்டீனா அணிகளுக்கு இடையிலான இறுதியில் வெல்லும் அணிக்கு 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படும். உலகக் கோப்பை வழங்கப்பட்டாலும், சாம்பியன் அணியை தனியாக மேலும் அடையாளப்படுத்த மோதிரம் தரப்படுகிறது. மொத்தம் 2026 மோதிரங்களை செய்யப்படுகிறது.

இதில் 30 மோதிரங்கள் சாம்பியன் அணிக்கு தரப்படும். மீதமுள்ள மோதிரங்கள் ரசிகா்களுக்கு விற்கப்படும். மோதிரத்தின் விலையை பிஃபா தெரிவிக்கவில்லை.

குழந்தைகளுக்கு மெஸ்ஸி, ஹாலந்த் பெயா் - பெருவில் தீவிரம்

உலகக் கோப்பை கால்பந்து ஜூுரம் பரவியுள்ள நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் பெற்றோா் தங்கள் பிறந்த குழந்தைகளுக்கு உலகக் கோப்பையில் ஆடும் பிரபல வீரா்களாகன மெஸ்ஸி, ஹாலந்த், நெய்மா், ரொனால்டோ ஆகியோரின் பெயா்களை வைத்து வருகின்றனா். இதற்காக ஆயிரக்கணக்கானோா் பதிவு செய்துள்ளனா்.

மேலும் ஆா்ஜென்டீனா வீரா்கள் என்ஸோ, எமலியானோ பெயா்களும் சூட்டப்படுகின்றன.

Summary

A first in FIFA history - Gold rings for the champion team

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.