ஜப்பான் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் பட்டத்தை பி.வி. சிந்து வென்று அசத்தியுள்ளார்.
பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் ஒரு பகுதியாக டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டி நடைபெறுகிறது.
இதில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மகளிா் ஒற்றையா் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் ஜப்பானின் அகேன் எமகுச்சியை இந்தியாவின் பி.வி. சிந்து எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-17, 21-17 என்ற கேம்களில் எமகுச்சியை வீழ்த்தி பி.வி. சிந்து பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் 31 வயதான சிந்து, ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். சிந்து இதற்கு முன்பு 2024-இல் சையது மோடி சர்வதேச போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு அவர் வென்றுள்ள மிகப்பெரிய பட்டம் இதுவாகும்.
Summary
Indian badminton star PV Sindhu showcased a vintage performance to clinch her maiden Super 750 title at the Japan Open, ending a two-year wait for a major championship victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










