கிளாஸ்கோ காமன்வெல்த் பாரா தடகளத்தில் இந்தியர்கள் தங்கம், வெள்ளி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.
திலீப் மஹாது காவிட் தங்கமும் முகமது பாசில் மோர்சிங்கனகத் வெள்ளியும் வென்றுள்ளார்கள்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
காமன்வெல்த் பாரா டி47 100 மீட்டர் தடகளத்தில் இந்தியாவைச் சேர்ந்த திலீப் மஹாது காவிட் 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.
இங்கிலாந்தின் கெவின் சந்தோஷ் 10.85 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். இதே பிரிவில் மற்றுமொரு இந்தியர் முகமது பாசில் மோர்சிங்கனகத் 10.83 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்று அசத்தினார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு இதுவரை 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே, குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள் உறுதியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இருபத்து ஐந்தை தாண்டுமென்பதும் கவனிக்கத்தக்கது.
Double the medals, double the pride. ð®ð³
— SAI Media (@Media_SAI) July 29, 2026
A historic Gold and Silver for Indian Para Athletics. Congratulations, Dilip and Basil!#Cheer4Bharat #CWG2026 #Glasgow2026 pic.twitter.com/TbiPwCernA
Result Updateð¨: Men's 100M T47
— SAI Media (@Media_SAI) July 29, 2026
A spectacular double podium finish!
TOPS athlete Dilip Mahadu Gavit stormed to Gold with a Games Record (10.71s) and Season Best, becoming the first Indian male para athlete to win a CWG Gold in Para Athletics and only the second Indian para⦠pic.twitter.com/iWwnRVvy6N
Summary
Commonwealth Games: Gavit, Basil script historic gold and silver for India in men’s 100m T47 final
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்! ஷா்மிளாவுக்கு வரலாற்று தங்கம்; சா்வேஷுக்கு சாதனை வெள்ளி

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது ஏன்? மனம் திறந்த மீராபாய் சானு!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK




