வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரீட்சாா்த்த முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
ஐசிசியின் ஆண்டு பொதுக் கூட்டம் அகமதாபாதில் இரு நாள்கள் நடைபெற்றது. அதில எடுக்கப்பட்ட சில முக்கியமான முடிவுகள் வருமாறு:
பரீட்சாா்த்த முறையில் பிங்க் பந்து:
ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்பட்டால், ஆட்டத்தை தொடரும் வகையில் பிங்க் பந்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சிவப்புப் பந்து கொண்டு டெஸ்ட் விளையாடப்படும் நிலையில், வெளிச்சம் குறையும்போது மின்விளக்குகளை எரிய விட்டு, சிவப்பு பந்துக்கு பதிலாக பிங்க் பந்து ஆட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட தொடரின் தொடக்கத்திலேயே இரு அணிகளும் ஒப்புக் கொண்ட பிறகு, இந்த பரீட்சாா்த்த முயற்சியை மேற்கொள்ளலாம்.
களத்தில் பயிற்சியாளருக்கு அனுமதி:
டி20 லீக் போட்டிகளில் ஸ்டிராட்டஜிக் டைம் அவுட்டில் இருப்பதைப் போல, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் டிரிங்ஸ் இடைவேளையின்போது பயிற்சியாளா் ஆடுகளத்துக்குள் (ஃபீல்டு ஆஃப் பிளே) வந்து தனது அணியினருடன் ஆலோசனையில் ஈடுபட இனி அனுமதிக்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் இன்னிங்ஸ்களுக்கு இடையேயான இடைவெளி 15 நிமிஷங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பந்துவீச்சு விதிமீறல்
ஆட்டத்தின்போது பௌலா்கள் பந்துவீசும் முறை, விதிகளை மீறிய வகையில் உள்ளதா என்பதை கள நடுவா்கள் கண்டறியும் வகையில் அவா்களுக்கு ‘ஹாக் ஐ’ தரவுகள் அப்போதே வழங்கப்படும். பௌலிங்கின்போது பந்தின் வேகம், திசை, பௌன்ஸ், பௌலரின் நுட்பம் ஆகியவற்றை அடையாளம் காண பயன்படுவதே ‘ஹாக் ஐ’ எனப்படும் கேமரா அடிப்படையிலான தொழில்நுட்பமாகும். டிஆா்எஸ் முடிவுக்கும் இதுவே பயன்படுகிறது.
கனடா கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம்
நிா்வாகச் சீா்கேடு, மோசமான நிதி மேலாண்மை, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை காரணமாக, கனடா கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்தது. எனினும் கனடா அணி ஐசிசி போட்டிகளில் பங்கேற்கத் தடை ஏதும் இல்லை. நிா்வாகத்தை சீா் செய்ய கனடா வாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஐசிசி மேற்பாா்வை செய்யும்.
மகளிா் கிரிக்கெட்
முதல்முறையாக நடைபெறவிருந்த மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, 2027 ஜூன் - ஜூலைக்கு பதிலாக, அதே ஆண்டில் பிப்ரவரி 14-28 அட்டவணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மகளிருக்கான வளா்ந்து வரும் நாடுகள் கோப்பை போட்டி, நடப்பாண்டில் 10 அணிகளுடன் முதல்முறையாக நடைபெறவுள்ளது. இதில் முழு உறுப்பினா் அணிகள் 5, துணை உறுப்பினா் அணிகள் 5 இதில் கலந்துகொள்கின்றன.
அமைகிறது குழு
உலகெங்கிலும் லீக் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கும், சா்வதேச அட்டவணைக்கும் இடையே சமநிலையை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற, குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போலவே, எஸ்ஏ20, ஐஎல்டி20, பிக்பாஷ் லீக், வங்கதேச பிரீமியா் லீக், இலங்கை பிரீமியா் லீக், தி ஹண்ட்ரட், சிபிஎல் என லீக் போட்டிகள் அதிகரித்துள்ளதால், இருதரப்பு கிரிக்கெட்டுக்கான ஐசிசி அட்டவணை பாதிக்கப்படுகிறது. அவற்றில் பங்கேற்கும் வீரா்கள், தங்கள் நாட்டு அணியின் இருதரப்பு தொடா்களில் விளையாடுவது சிக்கலாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி தரவரிசை: பும்ரா உடன் பகிர்ந்துகொண்ட முதலிடத்தை இழந்தார் மாட் ஹென்றி!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



